காந்தி குல்லாய் நேருவுக்கு அழகா, நேதாஜிக்கு அழகா ?


சுபாஷ் சந்திரபோஸ் தீரம் மிகுந்த போராளி. காந்திஜியின் அணுகுமுறையை "சென்ட்டிமென்டல் டிராமா'' வாக அவர் வெறுத்தார். ராணுவ யூனிஃபார்ம் உடையும் காக்கி குல்லாயும்தான் அவருக்குப் பொருத்தமாக இருந்தது. இருப்பினும், ஆரம்பத்தில் காங்கிரஸ் மாநாடுகளில் காந்தி குல்லாயை நேதாஜி அணிந்ததுண்டு. மென்மையான தோற்றத்தைத் தந்த ( இப்போது கூட காந்தி குல்லாயோடு வீச்சரிவாளைச் சுழற்றும் ஒரு ஆளை நம்மால் கற்பனை செய்ய முடியவில்லையே ! ) காந்தி குல்லாய், நேருவுக்காகவே உருவானதுபோலத்தான் தோன்றுகிறது. காந்தி குல்லாயில் மிகமிக வசீகரமாக ( திருமதி மவுன்ட் பேட்டனே மயங்கும் அளவுக்கு ) இருந்தவர் நேரு மட்டுமே !

""சந்திரலேகா'' படத்தின் டைட்டில் கார்டில் முக்கிய நடிகர்களான எம்.கே.ராதா. ரஞ்சன்,என்.எஸ்.கே., போன்றவர்களின் பெயர்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, கதாநாயகியான அன்றைய கனவுக்கன்னி டி.ஆர்.ராஜகுமாரியின் பெயரை முதலில் போடுகிறார்கள். இன்றைய கதாநாயகர்கள் இதற்கு ஒப்புக்கொள்வார்களா ?


டி.ஆர்.ராஜகுமாரி "கனவுக்கன்னி'யாகக் கொடிகட்டிப் பறந்துகொண்டு இருந்தபோது,எம்.கே.ராதாவும் ரஞ்சனும் அநேகமாகப் புதுமுகங்கள்தான். தவிர, அப்போது பல ஹாலிவுட் படங்களில் க்ரெட்டோ கார்போ, எலிசபெத் டெய்லர், ஆவா கார்ட்னர் போன்ற பெரும் நடிகைகளின் பெயரைப் பெரிசாக முன்னிலைப்படுத்திப் போடுவது சாதாரண விஷயம். ""ராஜகுமாரியும் அவர்களுக்கு இணையானவர்தானே ?!'' என்று எஸ்.எஸ். வாசன் கருதியிருக்கலாம்.

0 comments:

Post a Comment

 
Top