
-
பகலில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு
எதிரே வரும் வாகனத்தை எச்சரித்தபடி
முன்னேறுவது குற்றம்.
-
சாதாரண நேரங்களில் நான்கு புறங்களிலும்
உள்ள எச்சரிக்கை விளக்கை எரியவிடுவது
தவறு. அபாயகரமான அல்லது வாகனம்
பழுதாகி நிற்கும்போதோ, பழுதான
வாகனத்தை பிற வாகனங்கள் இழுத்துச்
செல்லும்போதோ போன்ற சூழ்நிலைகளில்தான்
எரியவிட வேண்டும்.
-
சிக்னல்கள் அல்லது ரோட்டில் வாகனங்களை
நிறுத்தி இருக்கும்போது அனைத்து
விளக்குகளையும் எரியவிடக் கூடாது.
-
சாலையின் நடுவில் கோடுகளைக் குறிப்பிட்ட
இடைவெளி விட்டுவிட்டுப் போட்டிருந்தால்
ஒரு வாகனத்தை நாம் இந்த இடத்தில் முந்திச்
செல்லலாம் என்று பொருள். அதேசமயம்
தொடர்ச்சியான நீண்ட கோடுகளாகப்
போட்டிருந்தால் முந்தக்கூடாது என்று பொருள்.
-
சாலையின் நடுவில் தொடர்ச்சியாக இரட்டைக்
கோடுகள் போட்டிருந்தால் அதை ஒரு தடுப்புச்
சுவராகக் கருத வேண்டும்.
-
ஓட்டுநருக்கு 20.5.மீ / 67 அடி தொலைவில்
வரும் வாகனத்தின் பதிவு எண்ணைப் படிக்க
முடிந்தால் கண்கள் நல்ல பார்வையுடன்
உள்ளது எனப் பொருள். எனவே ஆண்டுக்கு
ஒருமுறை ரத்த அழுத்தம், சர்க்கரை, கண்
பரிசோதனை செய்வது நல்லது.
-
கனரக வாகனங்களின் பின்புறம் சிவப்பு
முக்கோண வடிவச்சின்னம் உள்ளது. இது
மோட்டார் வாகனச் சட்டப்படி முற்றிலும்
தவறு. அது ஓர் எச்சரிக்கை சின்னம்.
சாலையில் ஒரு வாகனம் பழுதாகி நின்றாலோ,
அவசரநிலையிலோ அதை வாகனத்தின் பின்
புறம் 15 அடி தள்ளிதான் வைக்க வேண்டும்.
-
நெடுஞ்சாலையில் எதிரே வரும் வாகனத்திற்கு
வசதியாக முகப்பு விளக்குகளை 250 மீ
முன்பே “டிம்’ செய்ய வேண்டும்.
-
கார்களில் செல்வோர் சீட் பெல்ட் அணியும்போது
சட்டைப் பையில் செல்போன், பேனா, சில்லறைக்
காசுகளை வைத்திருப்பதைத் தவிர்க்க வேண்டும்.
பெண்கள் அதிக நகைகள் அணிந்திருக்கக் கூடாது.
அசம்பாவிதம் நேரிட்டால் அந்தப் பொருட்களே
பயணிக்கு எமனாக மாறிவிடும்.
-
வளைவுகளில் அதிவேகமாக வாகனம் ஓட்டிச்
சென்றால் விபத்து நடக்கும். அதற்கு “ஸ்லோ இன்’,
“பாஸ்ட் அவுட்’ என்ற முறையில் செல்ல வேண்டும்.
அதாவது மைய ஈர்ப்பு விசை, விலக்கு விசைகளின்
அடிப்படையில் வளைவுகளில் நுழையும்போது
மெதுவாகவும், பின்பு லேசாக ஆக்ஸிலேட்டரை
அழுத்தியும் செல்ல வேண்டும். ஆனால் பலர்
வேகமாக நுழைந்து பிரேக் அடித்துத் திரும்புகின்றனர்.
இதனால் வாகனம் கவிழ்ந்துவிடும் வாய்ப்பு உண்டு.
-
நமக்கு அவசர அழைப்பு எண் 108 என்பது தெரியும்.
மற்றுமொரு எண் 112 என்பது பலருக்குத் தெரியாது.
செல்போன் சிக்னல் இல்லாத இடங்களிலும்,
செல்போன் கீ லாக் செய்யப்பட்ட நிலையிலும் ஏன்
சிம்கார்டு இல்லாத நிலையிலும்கூட இந்த எண்ணை
அவசர உதவிக்குப் பயன்படுத்தலாம்.
-
மொத்தத்தில் விவேகமான வேகமே விபத்துகளில்
இருந்து நம்மைப் பாதுகாக்கும்.
-
——————————-
–தினமணி
KeyWords:
about traffic rules
california traffic rules
california traffic school rules
delhi traffic rules
florida rules of traffic court
florida traffic court rules
importance of traffic rules
kolkata traffic rules
mmda traffic rules
new traffic rules
new traffic rules nz
new york city traffic rules
new york city traffic rules and regulations
new zealand traffic rules
nyc traffic rules
nz traffic rules
obey traffic rules
ontario traffic rules
road safety and traffic rules
road traffic rules
roundabout traffic rules
school bus traffic rules
sign of traffic rules
slogan on traffic rules
slogans on traffic rules
the traffic rules
traffic circle rules
traffic light party rules
traffic light rules
traffic rules
traffic rules and regulations
traffic rules and road safety
traffic rules and signs
traffic rules for kids
traffic rules images
traffic rules in delhi
traffic rules in india
traffic rules in uk
traffic rules in usa
traffic rules new zealand
traffic rules of the road
traffic rules on road
traffic rules pictures
traffic rules signs
traffic rules test
traffic school rules
what are the traffic rules
what is traffic rules
0 comments:
Post a Comment