ராமநாதபுரம் : எதிரிகளிடமிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள, தன் குடலையே கொடுத்து விட்டு தப்பிக்கும் கடல் வெள்ளரி மீனினங்கள், மன்னார் வளைகுடா பகுதியில் காணப்படுகின்றன. கடலடியில் வாழ்வியல் பிரச்னைகள், உணவிற்கு போராட்டம், பாதுகாப்பின்மை என எத்தனையோ இன்னல்கள் வந்தாலும், அவற்றை தாக்கு பிடிக்கும் திறன்கள் பல உயிரினங்களிடம் இயற்கையாகவே அமைந்துள்ளன. இவைகளின் உத்திகள் நம்மை சிலிர்க்க வைக்கின்றன. உணவிற்கும், உயிர் பிழைக்கவும், இனப்பெருக்கம் செய்வதில் பல வினோதங்கள் மீனனிங்களிடம் உண்டு. உணவு, இடம் பாதுகாப்புக்கு ஒன்றையொன்று சார்ந்திருத்தல், இருபாலரும் உறவால் பலன் பெறுதல் என எத்தனையோ உறவு மலர்கள். அவற்றுள் சற்று வித்தியாசமானது கடல் வெள்ளரி. இவை தன் உடலினுள் மீனொன்று பதுங்கி வாழ அடைக்கலம் தருகிறது. சேற்றின் அழுக்கை தின்று, சுத்தப்படுத்தும் இயல்பு கொண்டது. இத்தகை சிறப்பு வாய்ந்த இந்த கடல் வெள்ளரி, ஆள் விழுங்கி மீனிடமிருந்து தப்பிக்க பல தந்திரங்களை கையாள்கிறது. அவற்றுள் ஒன்றுதான் தனது குடலையே வெளியேற்றி விடுவது. தாக்க வரும் இனம் அதை தின்று விட்டு போய்விடும். குடலில்லாத வெள்ளி மீனுக்கு மீண்டும் குடல் உருவாகிவிடும். இவை மன்னார் வளைகுடா பகுதி கடலடியில் காணப்படும் ஒரு அரிய வகை உயிரினம். நன்றி -தினமலர்
0 comments:
Post a Comment