""எருமை மாடுகள் மட்டும் ஏன் மிகவும் சோம்பேறியாக உள்ளன ?''


எருமை மாடு உங்களை நேருக்கு நேர் கூர்ந்துகூடப் பார்க்காது. ( அதாவது சட்டை செய்யாது.) நமக்குப் பொறாமை வரக்கூடிய அளவுக்கு, எல்லாம் கடந்த ஞானியைப் போல, ""ரிலாக்ஸ்'' ஆக அது இருக்கிறது. வெயிலும் மழையும் அதற்கு ஒன்றே. இதை "இரு வினையொப்பு' என்பார்கள் புலவர்கள். மரணத்தின் ரகசியங்கள் எமதர்மனின் வாகனமாகிய எருமைக்கு நிஜமாகவே தெரியுமோ என்றுகூடத் தோன்றுகிறது. நான்கூ அதைப் போல ஒரே இடத்தில் நகராமல் உட்கார்ந்திருப்பது உண்டு. கல்யாண வீட்டுச் சாப்பாட்டுப்பந்தியில் குறுக்கும் நெடுக்கும் ஓடும் சிலரைப் போல அல்லாமல், சாவதானமாக இருந்தால் அது சோம்பேறித்தனமா ? இதை நான் ஆட்சேபிக்கிறேன்.

0 comments:

Post a Comment

 
Top