ஆப்பிள் நிறுவனத்தின் வெற்றி ரகசியம் !
"Stay Hungry,Stay Foolish" இது உலகின் மிகப்பெரிய நிறுவனமாக திகழும் ஆப்பிள் நிறுவனத்தை உருவாக்கி,இந்த அளவுக்கு வளர்த்தெடுத்த ஸ்டீவ் ஜாப்ஸ் சொன்ன புகழ் பெற்ற வார்த்தைகள்.அறிவுப் பசியோட,எனக்கு எல்லாம் தெரியும் என்ற மேதாவித்தனம் இல்லாமல் இருப்பது என்று இந்த வார்த்தைகளுக்கு பொருள் எடுத்துக்கொள்ளாலாம்.

இந்த வார்த்தைகளில் எவ்வளவு உண்மை உள்ளது.இன்று நாம் பயன்படுத்தும் மின்சாரம்,கார், ரயில், விமானம், கணிப்பொறி உட்பட பெரும்பாலான அறிவியல் சாதனங்கள் அனைத்தும் கடந்த தலைமுறை கண்டுபிடித்து கொடுத்தது.நாம் அதை செம்மைபடுத்தியிருக்கிறோமே தவிர அதைத் தாண்டி வேறு ஒரு கண்டுபிடிப்புக்கு செல்லவில்லை.ஆக நம் தலைமுறையின் சிந்தனைத் திறனை குறைத்தது எது?.நம் கல்வி முறை தான்.
நம்மை ஒரு வட்டத்துக்குள் சிந்திக்க மட்டுமே நம் கல்வி முறை சொல்லித் தருகின்றது.உதாரணத்திற்கு மாட்டு வண்டியில் தொடங்கி,பேருந்து,ரயில்,விமானம் என்ற போக்குவரத்தின் அடுத்த கட்டம் பரிணாமம் என்னவாக இருக்கும்?.இந்த கேள்விக்கு பெரும்பாலும் விமானத்திற்கு அடுத்து நமக்கு எந்த சிந்தனையும் தோன்றாது. அதற்கு காரணம் நம் கல்வி முறை விமானத்திற்கு அடுத்து எதுவும் இல்லை என்ற மேதாவித்தனத்தை நமக்குள் ஏற்படுத்தி இருக்கின்றது.ஆனால் கடந்த தலைமுறைகளுக்கு இந்த மேதாவித்தனம் எதுவும் இருக்கவில்லை.அவர்களிடம் ஒரு அறிவுத்தேடல் இருந்தது.அதன் காரணமாகவே மனித குலத்தை செம்மைப்படுத்தும் பல கண்டுபிடிப்புகள் தோன்றின.
ஸ்டீவ் ஜாப்ஸின் வாயிலிருந்து வெளிப்பட்"Stay Hungry,Stay Foolish" என்ற இந்த வார்த்தைகளில் ஆப்பிள் நிறுவனத்தின் பிரம்மாண்ட வெற்றி ஒளிந்திருப்பதை அறியலாம்.'அடுத்து என்ன?' என்ற தேடல் தான் வெறும் இரண்டு நண்பர்களால் கார் செட்டில் துவங்கப்பட்ட ஆப்பிள் நிறுவனத்தை உலகின் முன்னணி நிறுவனமாக மாற்றியுள்ளது.

புதுமை சிந்தனைகள் நிறைந்த ஸ்டீவ் ஜாப்ஸ் வாழ்க்கையைப் பற்றி தெரிந்து கொள்ள இந்த புத்தகம் உதவும். 

0 comments:

Post a Comment

 
Top