மதுரையை ஆண்ட ராணி மங்கம்மாவின் மகன் முத்து வீரப்பரின் துணிச்சலைக்
கண்டு பேரரசர் ஒளரங்கசீப் வியந்துபோனாராமே?



டெல்லி பாதுஷாவான ஒளரங்கசீப், தன்னுடைய செருப்பு ஒன்றை யானை மீது வைத்து தென்னாட்டுக்கு ஊர்வலமாக அனுப்பினார். அந்தச் செருப்பு பயணிக்கும் ராஜ்ஜியங்களின் மன்னர்கள் அதற்குத் தலை வணங்கி மொகலாய அரசுக்குக் கப்பம் கட்ட வேண்டும். முத்து வீரப்பர் அந்தச் செருப்பை வணங் காமல் சர்வசாதாரணமாகத் தன் காலில் அணிந்து கொண்டு மொகலாய படைத் தளபதியிடம், ‘மனிதர்களுக்கு இரண்டு கால்கள் உண்டு என்பது உங்கள் பாதுஷாவுக்குத் தெரியாதா? இன்னொரு செருப்பு எங்கே?’ என்று இகழ்ச்சியாகக் கேட்க, கூடவே மெகலாய வீரர்கள் விரட்டி அடிக்கப்பட்டனர். இது பற்றிக் கேள்விப்பட்ட ஒளரங்கசீப் முதலில் கோபப்பட்டாலும், பிறகு யோசித்து, ‘செருப்பு ஊர்வலப் பழக்கத்தை’க் கைவிட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கான திட்டவட்டமான சான்றுகள் இல்லை என்றாலும், அ.கி.பரந்தாமனார், தான் எழுதிய ‘மதுரை நாயக்கர் வரலாறு’ புத்தகத்தில் இது உண்மையில் நடந்ததாகவே குறிப்பிடுகிறார்!

0 comments:

Post a Comment

 
Top